வாகனங்கள் நிறுத்துமிடம் பயணிகள் மகிழ்ச்சி
மந்தாரக்குப்பம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இருசக்கர,நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம், ரயில் மார்க்கத்தில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி கடலுார்-திருச்சி, காரைக்கால்-பெங்களுரு, கடலுார்-சேலம் ரயில்கள் இயக்கப்படுகின் றன. இங்கு நாள்தோறும், ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது நெய்வேலி ரயில் நிலையம் முன்பு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.