உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்களால் பயணிகள் பாதிப்பு

பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்களால் பயணிகள் பாதிப்பு

மந்தாரக்குப்பம் : வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையத்திற்குள் வராமால் செல்வதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி., சார்பில் அனைத்து வசதிகளுடன் கட்டி திறக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்திற்குள் டவுன் பஸ், சில அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. மேலும் சிதம்பரம்-சேலம், கடலுார்-திருப்பூர், கடலுார் - மதுரை உள்ளிட்ட வெளியூர் செல்லும் பஸ்கள் மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்திற்குள் செல்லாமால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சரியான நேரத்திற்கு வெளியூர் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ