பயணிகள் நிழற்குடை எம்.எல்.ஏ., அடிக்கல்
சிதம்பரம் :சிதம்பரம் அடுத்த லால்புரத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடைக்கு பூமி பூஜை நடந்தது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வாசுதேவன் வரவே ற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பயணிகள் நிழற்குடைக்கு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரசேகரன், கிளை செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.