உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாட்டாளி ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டம்

பாட்டாளி ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டம்

கடலுார் : கடலுார் மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம் நெய்வேலி, வடக்குத்து கிராமத்தில் நடந்தது.சமூக ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஜெகன் வரவேற்றார். நிர்வாகிகள் மணிபாரதி, காப்பியசெல்வன், கற்பகம் அருள்ராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் குமாரசாமி, அமர்நாத் முன்னிலை வகித்தனர். மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ஊடகப்பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபிநாத், மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சசிகுமார், மாநில துணை செயலாளர் சாமி கச்சிராயர், கிழக்கு மாவட்ட தலைவர் காசிலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் கதிரவன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு திராவிடன் பேசினர். சமூக வலைதளத்தினை பா.ம.க.,வினர் கவனமாக கையாள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், நிர்வாகி செல்வராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை