மேலும் செய்திகள்
கூழாங்கல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
20-Nov-2024
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த பொன்னேரி புறவழிச்சாலையில், உதவி புவியிய லாளர் ஜீவா தலைமையிலான சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியின்றி 3 யூனிட் கூழாங்கற்களை கடத்திச் செல்வது தெரிந்தது. புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
20-Nov-2024