உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்ட மாநாடு நடந்தது. வட்ட தலைவர் ஏசுயடியான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், ராமலிங்கம், ஜெயக்குமார் கல்பனா, பாலமுருகன், குமரவேல் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கமலக்கண்ணன் வரவேற்றார். மாநில துணை தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் வீரசாமி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், முத்துகிருஷ்ணன், பாண்டுரங்கன், திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர். விருத்தாசலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இணை செயலாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி