உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தெருநாய்களால் மக்கள் அவதி 

 தெருநாய்களால் மக்கள் அவதி 

சேத்தியாத்தோப்பு: -: சேத்தியாத்தோப்பில் தெரு நாய்களால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு பஸ்நிலையம், வடக்குமெயின்ரோடு, மேல்நிலைப்பள்ளி சாலை என பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அடிபட்டு மருத்துவமனைகளுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நாய்களை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப் படுகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ