உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்

கடலுார் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்

கடலுார் : வங்கக்கடலில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், கடலுார் முதுநகர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.கடலுார் மாவட்டம், 49 மீனவ கிராமங்களை உள்ளடக்கியது. மாவட்டத்தில் 250 விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள், கட்டுமரங்கள் உட்பட மொத்தம் 2,500 படகுகள் உள்ளன. கடலுார் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டிணம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு உட்பட பல்வேறு மீனவ கிராமத்தினர் பைபர் மற்றும் விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். வங்கக்கடலில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15ம் தேதி வரை 61நாட்கள் இருந்தது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீன்வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் 1,100 ரூபாய், வவ்வால் 800, நண்டு 400, சங்கரா 500, கானாங்கத்தை 300, இறால் 300 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ