உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபர் கைது

ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபர் கைது

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி எழுத்தர் தற்கொலைக்கு காரணமான நபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த இடையான்பால்சொரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 55; ஊராட்சி எழுத்தர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ், 38. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அடிதடி வழக்கு ஒரத்துார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.கடந்த 19ம் தேதி குமார் தனது மனைவி கவிதாவுடன் சிதம்பரம் பஸ்சில் சென்று பைபாஸ் பஸ்நிறுத்தத்தில் இறங்கியபோது, அங்கு வந்த சிவராஜ் குமாரிடம் தகராறு செய்தார். இதனால் மனமுடைந்து குமார் தனது தற்கொலைக்கு சிவராஜ் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 20ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்தார்.சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தினை ஒரத்துார் போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிந்து தற்கொலைக்கு காரணமான சிவராஜை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை