உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ராஜேந்திரபட்டிணம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 13ம் தேதி மீண்டும் வலி ஏற்பட்டது. இதில், மனமுடைந்த ராஜேந்திரன் பூச்சி மருந்தை குடித்தார்.உடன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி