உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூளை தொழிலாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு

சூளை தொழிலாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு

விருத்தாசலம்: செங்கல் சூளை தொழிலாளர்கள் பாதுகாப்பு கேட்டு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி சகுந்தலா, உறவினர் இளையபெருமாள் ஆகியோர் நேற்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்: ஏஜென்ட் தேவதாஸ் மூலம் திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் சூளையில் ஒரு மாதத்திற்கு முன் ரூ.1.5 லட்சம் முன்பணம் பெற்று வேலைக்கு சென்றோம். அங்கு, வாராந்திர படி, தினசரி உணவுக்கான தொகை தராமல் உரிமையாளர் முத்து அலைக்கழித்தார். இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமமடைந்தோம். இதுகுறித்து கேட்டதற்கு முத்து கொலை மிரட்டல் விடுத்தார். அதனால், உயிருக்கு பயந்து நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையில் இருந்து தப்பித்து வந்தோம். எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. புகார் குறித்து ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை