மேலும் செய்திகள்
காப்பகத்தில் ஏழு பெண்கள் ' எஸ்கேப் '
25-Aug-2025
நெல்லிக்குப்பம் : ஏழை பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் மாவட்ட தலைவர் பாலவீரவேல் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஏழை பெண்கள் திருமணம் செய்ய சிரமப்படுவதை உணர்ந்து மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தினார். அதன்படி ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கம் உதவி தொகையாக கொடுத்தார். இந்த திட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சி இருந்தவரை நடைமுறையில் இருந்தது. இதனால் ஏழை பெண்களின் திருமண செலவு மிகவும் குறைந்து பயனுள்ளதாக இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை நிறுத்தியதால் ஏழை பெண்கள் திருமணம் செய்ய சிரமப்படுகின்றனர். எனவே, மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
25-Aug-2025