உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளத்தில் மைதானம்; இளைஞர்கள் அவதி

குளத்தில் மைதானம்; இளைஞர்கள் அவதி

சேத்தியாத்தோப்பு;சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரை கூளாப்பாடி கிராமத்தில் தாழ்வான குளம் போன்ற இடத்தில் கீரப்பாளையம் ஒன்றிய நிதியில், ஊராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.மழைவெள்ளக்காலங்களில் விளையாட்டு மைதானம் மழுவதும் தண்ணீர் தேங்கி வடிவதற்கு மாதக்கணக்கில் ஆகின்றன.தற்போது, மழை பெய்து ஒரு வாரத்திற்கும் மேலாகியுள்ள நிலையில் விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் விளையாட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, கீரப்பாளையம் ஒன்றிய அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து விளையாட்டு மைதானத்தில் மண்கொட்டி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை