உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு மைதானம் தேவை

விளையாட்டு மைதானம் தேவை

விருத்தாசலம்: சின்னவடவாடி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால், இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, கிராம இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி, கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை