உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குள்ளஞ்சாவடியில் பா.ம.க., ஆலோசனை கூட்டம்

குள்ளஞ்சாவடியில் பா.ம.க., ஆலோசனை கூட்டம்

கடலுார்; கடலுார் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பா.ம.க., பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் குள்ளஞ்சாவடியில் நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில மாணவர் சங்கத் தலைவர் கோபிநாத், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர்.கட்சியின் கவுரவ தலைவர் மணி எம்.எல்.ஏ., மற்றும் மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பங்கேற்று பேசினர்.இதில், வரும் 21ம் தேதி நடக்கும் பா.ம.க., மாநில தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாட்டில் கடலுார் மாவட்டத்திலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது.கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் சாத்தனுார் அணை தண்ணீரால் பொருட்களை இழந்தவர்களை கணக்கெடுத்து இழப்பீடுகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநில துணை தலைவர் முத்துவைத்திலிங்கம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர், துணைச் செயலாளர் ரமேஷ், கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ