மேலும் செய்திகள்
அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
06-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பா.ம.க., ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜி, மாவட்ட தலைவர் செல்வராசு, உழவர் பேரியக்க தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன்னிலை வகித்தனர். மாநில சமூக நீதி பேரவை துணை தலைவர் தனபாண்டியன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜீ, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், ஆசைத்தம்பி, பாண்டியராஜன், ரவி, வெங்கட், மணியரசன், ஆறுமுகம், சங்கர், வடிவேல், சுந்தர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் மணிமாறன், திட்டக்குடி நகர செயலர் சுரேஷ், குழந்தைவேல், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வரும் 11ம் தேதி விருத்தாசலத்தில் நடக்கும் பொதுக்ககுழுவிற்கு வருகை தரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் நடக்கும் சமூக நீதி மகளிர் மாநாட்டில், 10 ஆயிரம் பேர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
06-Jul-2025