மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
12-Oct-2025
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட பா.ம.க.,செயற்குழு கூட்டம், கண்ணாரப்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்தது. பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சகாதேவன் வரவேற்றார். வழக்கறிஞர் சமூகநீதிப்பேரவை மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பாலாஜி, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, போஸ் ராமச்சந்திரன், தமிழரசன், சந்திரசேகர், லதா, விஜயகாந்தி, சிவாஜி, சந்திரகாசு, இளவரன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் பூத் கமிட்டி பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்லைக்கொள்முதல் செய்து, அவற்றை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
12-Oct-2025