மேலும் செய்திகள்
பா.ம.க., பொதுக்குழு கூட்டம்
21-Mar-2025
நெய்வேலி: வி.கே.டி., சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்என பா.ம.க., பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நெய்வேலியில் நடந்த ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கார்த்திகேயன், மகேஷ் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் பழனிசாமி, கவுரிசங்கர் , உலகசாமிதுரை ஆகியோர் பொதுக்குழுவின் அவசியத்தை வலியுறுத்தி பேசினர்.கூட்டத்தில் வரும் மே 11 ம் தேதி நடக்கவுள்ள சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் இருந்து 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும், அனைத்து சமுதாய மக்களையும் மாநாட்டில் பங்கேற்க செய்ய வேண்டும். வி.கே.டி., நெடுஞ்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், ஆறுமுகம், என்.எல்.சி., - பா.தொ.ச., தலைவர் குமாரசாமி, பொது செயலாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வைத்திலிங்கம், சேகர், சக்கரவர்த்தி, மாநில மகளிரணி தலைவர் சுஜாதா, செயலாளர்கள் தமிழரசி, சிலம்புசெல்வி வன்னியர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், உதயா, சுரேஷ், பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
21-Mar-2025