கடலுாரில் பா.ம.க.,பொதுக்குழு கூட்டம்: மாவட்ட செயலாளர் அழைப்பு
கடலுார்: கடலுார் மாவட்ட பா.ம.க., ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம், கடலுார் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 3மணிக்கு நடக்கிறது. அதில் மாவட்டத்திலுள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்டசெயலாளர் முத்துகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி , தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தி வருகிறார். இன்று மாலை 3மணிக்கு கடலுார் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கும், கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்று பேசுகிறார். கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்புகுழு தலைவர் கோவிந்தசாமி, சமூக நீதிபேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் செல்வகுமார், பா.ம.க.,பொதுசெயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்று பேசுகின்றனர். முன்னதாக கடலுார் முதுநகர் இரட்டை ரோடு அருகே வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள், சார்புஅணி நிர்வாகிகள் உட்பட அனைவரும் வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.