உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ

திட்டக்குடி : சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அரியலுார் மாவட்டம், மணக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த அருள் மகன் வசந்த்,23. இவர் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியை கடந்த பிப்.,5ம் தேதி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்தார். இதுகுறித்து மங்களூர் வட்டார சமூக நல அலுவலர் பரமேஸ்வரி, அளித்த புகாரின் பேரில் வசந்த் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி