உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 மாணவர்கள் மாயம் போலீஸ் விசாரணை

2 மாணவர்கள் மாயம் போலீஸ் விசாரணை

திட்டக்குடி : திட்டக்குடியில் தனி யார் பள்ளி மாணவர் கள் இருவர் மாயமானது குறித்து போலீசார் விசா ரிக்கின்றனர்.திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மகன் ராஜதுரை, 14. தொழுதூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 22ம் தேதி இரவு 9:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதேபோன்று, அதே பள்ளியில் படிக்கும் திட்டக்குடி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ராஜா மகன் சச்சின், 14, என்பவரும் காணவில்லை.இருவரது பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வராததும், படிக்க பிடிக்காததால் வேலைக்கு வெளியூர் செல்வதாகவும் சக மாணவர்களிடம் தெரிவித்தது தெரிந்தது. புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை