மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
14-Sep-2025
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே வாழைத்தோப்பில், மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாய கூலித் தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி பி.டி.எஸ்., மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி, 45; இவரது மனைவி செல்வி, 37; இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த, 8 மாதங்களாக வீரமணி, குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை 6:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள வாழைத் தோப்பில் வீரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Sep-2025