9 ம் தேதி பொங்கல் தொகுப்பு: ரேஷன் கடைகளில் பெறலாம்
கடலுார்; பொங்கல் பண்டிகையொட்டி, குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் தொகுப்பினை வரும் 9ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பொங்கல் பண்டிகையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக 9ம் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், மாவட்டத்தில் 7லட்சத்து 77 ஆயிரத்து 868 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 428 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் பயன்பெறுவர். சிரமமின்றி பொங்கல் தொகுப்பு பெறும் வகையில், இன்ற (3ம் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படும்.பொங்கல் தொகுப்பு தொடர்பாக புகார்களை தீர்வு செய்ய வட்ட மற்றும் மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை (கலெக்டர் அலுவலகம்) - 04142-230223, கட்டுப்பாட்டு அறை (இணை பதிவாளர் அலுவலகம்) -04142-284001, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், கடலுார் -7338720401, மாவட்ட வழங்கல் அலுவலர் (மாவட்டம் முழுவதும்) -9445000209, மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.