உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு பூங்குணம் கிராம மக்கள் போராட்டம்

நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு பூங்குணம் கிராம மக்கள் போராட்டம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பூங்குணம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க அரசானை வெளியிடப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மா.கம்யூ மற்றும் ஊராட்சி பொதுமக்கள் இணைந்து மக்கள் திரள் போராட்டம் நடத்தினர். மா.கம்யூ., கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தங்கராசு ,மோகன், பெருமாள், கங்காதுரை, பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு ராமசந்திரன், வட்ட செயலர் ஏழுமலை, மாவட்ட குழு கிருஷ்ணன், வினோத்குமார் பேசினர்.ஊராட்சி சார்பில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலசுப்ரமணியம், பாலு, முன்னாள் துணை தலைவர் ராமு, ரமேஷ், மனோகர், தனசிங், கந்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை