உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நத்தவெளி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

நத்தவெளி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடலுார்: கடலுாரில் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் திருப்பாதிரிப் புலியூர் நத்தவெளி சலை வழியாக, பண்ருட்டி மார்க்கத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், கார் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள மும்முனை சந்திப்பு பகுதியில் குண்டும் குழியுமாக மெகா சைஸ் பள்ளமாக மாறியுள்ளது. தற்போது பெய்துள்ள மழையால், இப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை