உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கர்ப்பிணி மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்

கர்ப்பிணி மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்

புவனகிரி; மருதுார் அருகே வீட்டில் இருந்த கர்ப்பிணி மனைவியை காணவில்லை, என அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். .புவனகிரி தாலுகா, மருதுார் அருகே கஸ்பா ஆலம்பாடி வள்ளலார் கோவில்தெருவைச் சேர்ந்தவர் நடேசன் மகன் முரளிதாஸ்,29; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், காட்டுமன்னார்கோவில் தாலுகா, அத்திப்பட்டுஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகள் சித்திராதேவிக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியினர் புவனகிரி அடுத்த கஸ்பாஆலம்பாடியில் வசித்து வந்தனர். சித்திராதேவி தற்போது இரண்டுமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 16ம் தேதி காலை வேலைக்கு சென்ற முரளிதாஸ், இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை