மேலும் செய்திகள்
இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
25-Mar-2025
பெண்ணாடம்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பெண்ணாடம், திட்டக்குடி தொலைக்கல்வி மையத்தில் 2024ம் கல்வியாண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெண்ணாடம் தொலைக் கல்வி மையத்தில் மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கண்ணன், தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். தமிழரசன் வரவேற்றார். 2024ல் தேர்ச்சி பெற்ற இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பி.ஏ., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் பயன்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெறுவது குறித்து பேசப்பட்டன. மைய பணியாளர்கள் லட்சுமி, அனிதா, பரமேஸ்வரி, சுகுணா, சிவசங்கரி, சவுந்தர்யா, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
25-Mar-2025