மேலும் செய்திகள்
கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது
26-Jun-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே சாலை போடும் பணியின் போது ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு காலனியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமதாஸ். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி ஒப்பந்தம் எடுத்து, சாலை பணியை துவக்கினார். சாலை, அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் பட்டாவில் வருவதாக கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தி, கடந்த சில தினங்களுக்கு முன் கலெக்டரிடம் மனு கொடுத்தார். இது சம்பந்தமாக மணிகண்டன், ராமதாஸ் இடையே முன் விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று மணிகண்டன், இவரது மனைவி அஸ்வினி, ஆதரவாளர்கள் லட்சுமணன் ஆகியோரும், ராமதாஸ், இவரது அண்ணன் சந்திரசேகர், அவரது மகன் கமலேஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த கமலேஷ், மணிகண்டன், அஸ்வினி கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் ராமதாஸ், மணிகண்டன் ஆகிய இருவரும் கொடுத்த தனித் தனி புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Jun-2025