மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
02-Aug-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 68; சி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இருவரும் கோவில் பூசாரியாக உள்ளனர். நேற்று காலை இருவரும் மொபட்டில் சி.என்.பாளையத்தில் இருந்து பட்டீஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனம் மொபட் மீது மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த ஆனந்த் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவ வருகிறார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Aug-2025