மேலும் செய்திகள்
பஸ் 'டைமிங்' பிரச்னை கண்டக்டர்கள் வாக்குவாதம்
17-Aug-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பஸ் மோதியதில் மாடு இறந்ததால் பஸ்ஸை மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரத்தில் இருந்து நேற்றிரவு 7:00 மணிக்கு கடலுார் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் ஓட்டினார். நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் அருகே பஸ் வந்த போது, சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் பசு மாடு மீது பஸ் மோதியது. இதில், மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸை சிறைபிடித்து டிரைவர் கமலக்கண்ணனை பிடித்து சென்று நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
17-Aug-2025