கிள்ளை அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா
கிள்ளை: கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு தின விழா நடந்தது. இதனையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் கவிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ரேவதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் பங்கேற்று, வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ஜெயபாரதி நன்றி கூறினார்.