உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 10ம் வகுப்பு மாணவி லோகேஸ்வரி, பிளஸ் 2 மாணவி சஹானா ஆகியோருக்கு அப்கிரேட் சைக்கிள் கிளப் சார்பில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் குமார், பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா மிதிவண்டி, கேடயம் வழங்கி பாராட்டினர். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்த மாணவர்கள் கீர்த்தனா, ஹரிஹரன், சஞ்சய்குமார், ஹரிதா லட்சுமி, ஜெயஸ்ரீ, ஜெய்ஷ் ஜோஷி, ஷரவந்த் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது. விழாவில், ஆனந்தபைரவி இசைக்குழுவினர் பரத நாட்டிய நிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம் நடத்தினர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை