மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
மந்தாரக்குப்பம் : வடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பஸ் நிலையத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாணவ, மாணவியர்களிடையே பரத நாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வடலுார் டி.ஆர்.எம்.,சாந்தி அறக்கட்டளை தாளாளர் ராஜமாரியப்பன் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் பா.ஜ., நிர்வாகிகள் ராஜசேகரன், திருமுருகன், பழனிவேல், செல்வகணபதி, இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.