பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கிள்ளை; சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி முன்பு பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக கிளை தலைவர் ரவி தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்லுாரி முதல்வர்களில் மூத்த பேராசிரியரை கல்லுாரி கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.