கடலுாரில் திட்டப்பணிகள் : கலெக்டர் ஆய்வு
கடலுார் : கடலுார் பகுதியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.கடலுார் ஆல்பேட்டை அங்கன்வாடி மையம், மஞ்சக்குப்பம் முதல்வர் மருந்தகம், மஞ்சக்குப்பம் மற்றும் செம்மண்டலம் நியாய விலைக் கடைகள், தேவனாம்பட்டினம் கல்லூரி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகள், முதுநகர் பீமாராவ் நகர் அங்கன்வாடி கழிப்பறை, குடிகாடு ஊராட்சி துவக்கப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஆலோசனை வழங்கினார். அப்போது டி.ஆர்.ஓ., ராஜசேகரன், டி.எஸ்.ஓ., ராஜி, கூடுதல் கலெக்டர் சரண்யா, ஆர்.டி.ஓ., அபிநயா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.