மத்திய பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம்
கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில துணைத் தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், எச்.எம்.எஸ்., வட்ட பொருளாளர் அருள்செல்வன், எல்.எல்.எப்., மாவட்ட பொருளாளர் சக்திதாசன் முன்னிலை வகித்தனர்.தொ.மு.ச., பேரவை இணை பொதுச் செயலாளர் பாரி, சி.ஐ.டி.யு.,மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் சுப்புராயன், பாஸ்கரன், பாபு மற்றும் தொ.மு.ச., -சி.ஐ.டி.யு., -ஐ.என்.டி.யூ.,சி., -எச்.எம்.எஸ்.,- எல்.எல்.எப்., -ஏ.ஐ.டி.யூ.சி., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர், மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.