சிமென்ட் சாலை பணி நிறுத்தியதால் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பம் : சிமென்ட் சாலைப் பணி நிறுத்தப்பட்டதால் நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஊர்ப்பாட்டம் நடந்தினர். நெல்லிக்குப்பம் நகராட்சி 5 வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் கோவில் அருகே சிெமன்ட் சாலை போடும் பணி கடந்த வாரம் துவங்கியது.சாலை போடும் இடம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும்.எனவே அங்கு சாலை போட கூடாது என கோவில் நிர்வாகத்தினர் நகராட்சியிலும் போலீசிலும் புகார் அளித்தனர்.சாலை போடும் இடத்தை பார்வையிட்ட நகராட்சி இன்ஜினியர் வெங்கடாஜலம் பிரச்னை வருவதால் சாலை போடும் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று சாலை போட கொட்டி வைத்திருந்த ஜல்லியை ஒப்பந்ததாரர் எடுத்து செல்ல முயன்றார்.அப்பகுதி மக்கள் பணி முடியும் வரை ஜல்லியை எடுக்க கூடாது என தடுத்தனர்.அந்த இடம் மண் சாலையாக இருப்பதால் சிெமன்ட் சாலை போட்டே ஆக வேண்டும். சாலை போடுவதை நிறுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் தமிழ்மாறன்,அ.தி.மு.க நகர பொருளாளர் மோகன்,பாபு,சுமன்,பன்னீர்,கமலகண்ணன் உட்பட ஏராளமான மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களிடம் சேர்மன் ஜெயந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி முடிவு செய்வோம் என சேர்மன் ஜெயந்தி கூறியதை ஏற்று கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.