உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகள் போராட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விருத்தாசலம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில், 56 மாற்றுத்திறனாளிகளில், 34 பேருக்கு வி.குமாரமங்கலம் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, நேற்று காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, கடந்த 23ம் தேதி தாசில்தார் அரவிந்தன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இலவச மனைப்பட்டா வழங்கிடாத அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டபடி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், 10 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக தாசில்தார் அரவிந்தன் உறுதியளித்ததையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை