உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு, காலிகுடங் களுடன் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சி, சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்யும் போர்வெல் மோட்டார், கடந்த 2 தினங்களுக்கு முன் பழுதடைந்தது. அதனை சீரமைக்ககாததால், கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர்.இதனை கண்டித்து கிராம மக்கள் நேற்று காலை 9:45 மணிக்கு அதே பகுதியில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை