உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய ஊரக வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் முன், மா.கம்யூ., மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் மணி, மா. கம்யூ., ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், உறுப்பினர்கள் இளங்கோவன், வீரமணி, தமிழ்மணி, சி.ஐ.டி.யூ., கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்கம் வினோதினி மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.கம்மாபுரம் ஒன்றிய கிராமங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறத்தப்பட்டன. பின், பி.டி.ஓ., ரேவதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ