உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருந்தகத்திற்கு உதவிகள் வழங்கல்

அரசு மருந்தகத்திற்கு உதவிகள் வழங்கல்

சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்திற்கு 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. சிதம்பரம், அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்திற்கு சென்ட்ரல் ரோட்டரி சங்க சாசனத் தலைவர் முஹமது யாசின் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான, குளிசாதன பெட்டி, கட்டில், நாற்காலிகள் ஆகிய வழங்கினார்.நிகழ்வில், பொருளாளர் சஞ்சீவ்குமார், மூத்த உறுப்பினர் சுப்பையா, முன்னாள் தலைவர் நடனசபாபதி, சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஏகாம்பரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை