உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.75 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.75 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார்: கடலுாரில் நடந்த விழாவில் ரூ.74.99 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு மனைப்பட்டா வழங்குதல், முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கம்பியம்பேட்டை செயின்ட ஜோசப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் வரவேற்றார்.அமைச்சர்கள் பன்னீர் செல்வம், சிவசங்கர் பங்கேற்று இலவச மனைப்பட்டா, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர்.விழாவில், 16 துறைகள் மூலம் ரூ.74,99 கோடியில், 2,419 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைசெல்வன், எஸ்.பி., ராஜாராம், மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை