சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்
விருத்தாசலம் : விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில், எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், சிறு, குறு வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்றார். முன்னாள் வர்த்தகர் சங்க தலைவர் சண்முகம், வர்த்தகர் சங்க மாநில துணை தலைவர் பழமலை ஆகியோர் பேசினர். நகர வர்த்தகர் சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், நகராட்சி கவுன்சிலர் கருணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில், எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.