மேலும் செய்திகள்
3 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
09-Dec-2025
சிறுபாக்கம்: நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த அமைச்சருக்கு தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதுார் உட்பட, 5 ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம், மக்கள் குறை கேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு, தி.மு.க., ஒன்றிய செயலர் சின்னசாமி, ஒன்றிய துணை செயலர் ராமதாஸ் ஆகியோர், மேளதாளத்துடன் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், திருஞான சேகர், தேவேந்திரன், ரா ஜேந்திரன், பெரியசாமி, தங்கதுரை, கணேசன், ராமசாமி, மணி, சூரிய பிரகாஷ், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
09-Dec-2025