உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெயரளவில் கழிவுநீர் அகற்றும் பணி: பொதுமக்கள் அதிருப்தி

பெயரளவில் கழிவுநீர் அகற்றும் பணி: பொதுமக்கள் அதிருப்தி

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் பெயரளவில் கழிவுநீர் அகற்றும் பணி நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை-கன்னியாகுமரி தொழில் அபிவிருத்தி திட்டத்தில் கடலுாரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி நடந்தது. நெல்லிக்குப்பம் நகர பகுதியில் புதியதாக சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டது. விநாயகர் கோவில் அருகே மற்றும் சில இடங்களில் கழிவுநீர் கால்வாயை முறையாக இணைக்காமல் கடந்த ஒரு ஆண்டாக பணி கிடப்பில் உள்ளது. இதனால், சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன் டேங்கர் லாரி மூலம் தற்காலிகமாக கழிவுநீரை அகற்றினர்.கால்வாயில் ஒரு வருடத்துக்கு மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுபோன்ற நிலையில், பெயரளவில் ஒரு சில இடங்களில் மட்டும் டேங்கர் லாரியில் கழிவுநீர் அகற்றப்படுகிறது. இதனால், மீண்டும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை