உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கடற்கரை பகுதியில், கழிவு பொருட்களை கொட்ட சென்ற லாரிகளை பொது மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான கடற்கரை பகுதியையொட்டி, இயற்கையாக உருவான 'வம்பா மேடுகள்' என அழைக்கப்படும் மணல் மேடுகள் அமைந்துள்ளன.கிருமாம்பாக்கத்தில் தனியார் இடத்தில் இருந்து அகற்றப்பட்ட கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் லாரி மூலம் வம்பாமேடு ஒட்டிய பகுதியில் கொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்துள்ளனர்.இதையறிந்த அப்பகுதி மக்கள் இயற்கை சூழல் பாதிக்கப்படும் என, லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, லாரிகள் விடுவிக்கப்பட்டு, திரும்பி சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ