உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ள பாதிப்பை தடுக்க பொதுநல அமைப்பு மனு

வெள்ள பாதிப்பை தடுக்க பொதுநல அமைப்பு மனு

கடலுார்: கடலுாரில் வெள்ள பாதிப்பை தடுக்க பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டுமென, கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடியிடம் கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி அளித்த மனு: 'பெஞ்சல்' புயலால் கடலுார் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, பெண்ணையாற்றங்கரை கிராமங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் இருந்து கண்டக்காடு, தாழங்குடா இருபுறமும் கற்களை கொட்டி அணைகளை உயர்த்தி, விவசாய நிலங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை