உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

விருத்தாசலம் : புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி, விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில், நேற்று காலை சுப்ரபாத சேவை நடந்தது. தொடர்ந்து தோமாலை சேவை, ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயார் மூலவருக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ராஜகோபால சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திருப்பதி ஏழுமலையான் அலங்காரமான திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேப் போன்று, சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள், மேலகோட்டை வீதி சாந்த ஆஞ்சநேயர், ஆலடி ரோடு ராம ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ