வினாடி வினா போட்டி
பண்ருட்டி: கடலுார் மாவட்ட பள்ளிகள் அளவில் நடந்த வினாடி வினா போட்டியில் பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.மாவட்ட பள்ளிகள் அளவில் நடந்த வினாடி வினா போட்டி கடலுார் கிருஷ்ணசாமி பள்ளியில் நடந்தது. பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மனோஜ், ஷாலினி மற்றும் யஷ்வந்த் ஆகியோர் ஒரு குழுவாக பங்கேற்றனர்.பல சுற்றுகளாக நடந்த போட்டியில் இவர்கள் முதலிடம் பெற்று, இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ரவி பாராட்டினர்.