உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி

ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள நாச்சியார்பேட்டை கேட் வழியாக வேப்பூர், மங்கலம்பேட்டை மார்க்கத்தில் தினசரி 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர். ரயில் நிலையத்தில் தண்டவாளம், மின் பாதை, சிக்னல் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், ரயில்வே கேட் பகுதியில் சீரமைப்பு பணி நேற்று துவங்கியது.இதற்காக, நேற்று காலை முதல் ரயில்வே கேட் மூடப்பட்டு, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது. சிலீப்பர் கட்டைகள், ஜல்லிகளை அகற்றி புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் பணிகள் முடியாவிட்டால், நாளை (இன்று) கேட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை